திருச்சியில் 2.34 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் - 3 பேர் கைது.

திருச்சியில் 2.34 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் - 3 பேர் கைது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், அபுதாபி, ஷியாபுதீன் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை விமான அந்நிறுவன ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த திருச்சி சேர்ந்த முகமது சையது (34), ராஜ் முகமது(35), கலீல் ரகுமான் (34) ஆகிய மூன்று பேரின் உடைமைகளில் கட்டு சோதனை செய்தபோது அதில் கட்டாக வெளிநாட்டு பணம் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.


இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர்
மூன்று பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து அமெரிக்க டாலர், மலேசியன் ரிங்கட், சிங்கப்பூர் டாலர் ஆகியவை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தின் இந்திய ரூபாயில் 2.34 கோடி மதிப்பு என கூறப்படுகிறது. மேலும் இந்த மூன்று நபர்களுக்கு வெளிநாட்டு பணத்தை கொடுத்தது யார்? இவர்கள் யாருக்கு பணம் கடத்தி செல்கிறார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருவரிடமும் ஒரு லட்சம் (USD) வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல். மொத்தமாக இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO