திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 20 வது பட்டமளிப்பு விழா

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 20 வது பட்டமளிப்பு விழா

திருச்சியில் துவாக்குடி பகுதியில் உள்ள என்.ஐ.டி எனப்படும் தேசிய தொழில்நுட்ப கழகத்தின், 20ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் விதமாக இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் (டி.எஸ்.ஐ.ஆர்) செயலாளர் முனைவர் கலைசெல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

 20ஆவது பட்டமளிப்பு விழாவில், திருச்சி என்.ஐ.டி இயக்குநர் முனைவர் அகிலா 2,173 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இதில் 53 பி.ஆர்க்., 1,054 பி.டெக்., 25 எம்.ஆர்க்., 523 எம்.டெக்.88 எம்.எஸ்சி. 113 எம்.சி.ஏ. 87 எம்.பி.ஏ. 22 எம்.ஏ.. 11 எம்.எஸ் (ஆராய்ச்சி மூலம்) மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

என். ஐ. டி திருச்சியில் இதுவரை வழங்கப்பட்ட முனைவர் பட்டங்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமான இந்தாண்டு 197 முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டது. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பி.டெக் படித்த ஸ்னேஹா அன் ரெஜி மிக உயர்ந்த சி.ஜி.பி.ஏ க்கான புகழ்பெற்ற ஜனாதிபதி பதக்கத்தைப் பெற்றனர்.

9 பி.டெக்., 1 பி.ஆர்க். 23 எம்.டெக்., 4 எம்.எஸ்.சி. 1 எம்.ஆர்க்., 1 எம்.சி.ஏ. 1 எம்.பி.ஏ மற்றும் 1 எம். ஏ பட்டதாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்ஐடி பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision