மணப்பாறை அருகே 22 மயில்கள் உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை.

மணப்பாறை அருகே 22 மயில்கள் உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விஷ உணவருந்தி தனியார் தோட்டத்தில்  இறந்து கிடந்த 22 மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணப்பாறை அடுத்த கீழபொய்கைப்பட்டியில் வசித்து வரும் விவசாயி வேலுச்சாமி மகன் ராசு என்பவரது கடலை தோட்டத்தில்  சில மயில்கள் நகர முடியாமல் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வனச்சரகர் மகேஷ்வரன், வனவர் விடுதலைச்செல்வி ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என 22 மயில்கள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் விளைநிலத்தில் வனவிலங்குகளுக்கு சுருக்கு கம்பி கண்ணி வலை வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து மயில்களின் உடல்களை மீட்டு வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்டது. கால்நடை மருத்துவர் தமிழ்செல்வன் பறவைகளின் உடல்களை உடற்கூராய்வு மேற்கொண்டார். இதில் பறவைகள் விஷ உணவு அருந்திருக்கலாம் என்றும், கண்ணியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் முதற்கட்டமாக தெரியவந்தது. இந்நிலையில், நில உரிமையாளர் ராசு தலைமறைவாகியதைத் தொடர்ந்து அவரது மனைவி சின்னப்பொண்ணு(எ) பொன்னம்மாளை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

22 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM