திருச்சியில் மின்னல் தாக்கியதில் 3 பசுமாடுகள் பலி

திருச்சியில் மின்னல் தாக்கியதில் 3 பசுமாடுகள் பலி

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஓன்றியத்திற்க்குட்பட்ட கீழப்பட்டி பகுதியில் வசிப்பவர் மூர்த்தி. இவர் இப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வைத்து பராமரித்து வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாகவே அக்னி வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டு வந்தது.

நேற்று திடீரென மாலையில் துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்று வீச தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது மூர்த்தி வழக்கம் போல் தனது மாடுகளை வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தின் அடியில் கட்டி வைத்துள்ளார்.

அப்பொழுது பயங்கர சத்தத்துடன் இடியோசை கேட்டது சட்டென மின்னல் வேப்ப மரத்தில் மேல் விழுந்தது. அதில் கட்டியிருந்த மாடுகள் மீது மின்னல் தாக்கியதால் மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து ஏரகுடி கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மருத்துவர்கள் மாடுகளை உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் புதைக்க அனுமதித்தனர். பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn