வீட்டின் வாசலில் நாட்டு வெடியை வீசி சென்ற 3 நபர்கள் அதிரடி கைது

வீட்டின் வாசலில் நாட்டு வெடியை வீசி சென்ற 3 நபர்கள் அதிரடி கைது

திருச்சியில் கடந்த (05.11.2023)-ந் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரில் ஒரு பெண் வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தகாத வார்த்தையால் பேசி ஏதோ பொருளை வீட்டின் வாசலில் வீசியதில், அது வெடித்து சத்தம் கேட்டதில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஒடிவிட்டதாகவும் நடவடிக்கை வேண்டி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சம்பவ இடத்தில் காவல் அதிகாரிகள் விசாரணை செய்தும், சம்பவ இடத்தில் தடய அறிவியல் உதவி இயக்குநர் நேரில் பார்வையிட்டும் மாதிரிகளை சேகரித்தும், விசாரணை மேற்க்கொண்டதில் வீட்டின் வாசலில் இரண்டு பெரிய நாட்டு வெடி (வெங்காய வெடி) வீசி சென்றுள்ளார்கள் எனவும், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கம் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புகார்தாரர் அடையாளம் தெரிவித்த நபர்களை பற்றி புலன்விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.

விசாரணையில், 1.வரதராஜன் (23), த.பெ. ஆனந்த், 2. முகேஷ் (23), த.பெ. ராஜா 3.சடையன் @ அய்யப்பன் த.பெ. தியாகராஜன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக மேற்படி வீட்டின் வாசலில் நாட்டு வெடி (வெங்காய வெடி) வீசிவிட்டு தப்பிச்சென்று, தலைமறைவாக இருந்தவர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, வரதராஜன், முகேஷ் ஆகியோர்கள் தப்பிக்க முயன்று கம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்தில் எதிரிகள் வரதராஜன், முகேஷ் இருவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டதில் 3 நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் மேற்படி மூன்று நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் விசாரணையில் எதிரி வரதராஜ் என்பவர் மீது அடிதடி, வழிப்பறி,போக்சோ என 5 வழக்குகள், முகேஷ் என்பவர் மீது அடிதடி வழக்கு, வழிப்பறி என 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.

இவ்வழக்கினை விசாரணை செய்து, எதிரிகளை விரைந்து கைது செய்த காவல் ஆய்வாளர், தனிப்படையினர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision