கும்பகோணம் பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அன்று அனுமன் சிலை திருடு போனது. அதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான கடத்தல் தடுப்பு பிரிவினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய சில நபர்களிடம் காட்சிகளை கேட்டறிந்து குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கிடமான சில நபர்கள் 22.12.2022 மீண்டும் அக்கோவிலுக்கு வேறு ஒரு சிலையை திருட வந்தனர்.
ஏற்கனவே சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படங்கள் காட்சிகளை கோயிலில் சிலை கடத்தித் தடுப்பு பிரிவினர் கொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர்களை 22ம் தேதி கும்பகோணம் பைபாஸ் சாலையில் பிடித்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர். நீலகண்டன் என்பவர் திருவள்ளூர் மாவட்ட சேர்ந்தவர் இவரிடம் விசாரணை நடத்தியதில் இச்சிலையை திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பின்பு அவரது கூட்டாளி மணிகண்டன் திட்டமிட்டு இச்சிலையை திருடி வெளிநாட்டுக்கு அனுப்பி கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் என இருவரும் திட்டமிட்டனர்.
இதனை அடுத்து நீலகண்டன் வீட்டில் சோதனை செய்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கள் கோவில் நாயக்க மன்னர்கள் நிறுவப்பட்ட அனுமன் சிலை என்பதை தெரிய வந்தது. இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் செய்தியாளர்களை சிந்தித்த போது… இதுவரை கற்சிலைகள், மர சிற்பங்கள், உலோகத்தினால சிலைகள் 248 கைப்பற்றப்பட்டுள்ளது. 62 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாக சிலைகள் மீட்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சிலை கடத்தல் தொடர்பாக கோயில் ஊழியர்களுக்கும் ஏதும் தொடர்பு இருக்ககிறதா என்பதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments