33% இட ஒதுக்கீடு வெறும் கண்துடைப்பு தான் - இந்திய தேசிய மாதர் சம்மேளன அகில இந்திய தலைவர் ஆணி ராஜா பேச்சு
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பொது மாநாடு திருச்சியில் நடைபெற்றது இதில் சம்மேளனம் முன்னோடிகள், தியாகிகள் படத்திறப்பு மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் பெண் உரிமைக்கான போராட்டங்கள் குறித்தான கண்காட்சியை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பொது செயலாளர் ஆனிராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்... பாஜக அரசு கொண்டுவந்த பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்பது வெறும் கண்துடைப்பு
சர்க்கரையை பேப்பரில் எழுதிவிட்டு அது இனிக்கும் என்பதுபோல மத்திய பாஜக அரசு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்ததால், அவசர அவசரமாக இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
2014 முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக நினைத்திருந்தால் எப்போது இச்சட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம். நீதிமன்ற தலையீட்டிற்கு பின் அவசரம் அவசரமாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்துள்ளது என பேசினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision