ஜனவரி 4, 2026 அன்று 43-ஆவது தமிழ்நாடு கராத்தே சாம்பியன்ஷிப் சென்னையில் உள்ள சாந்தோம் மான்ஃபோர்ட் பள்ளி உள் விளையாட்டு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலிருந்தும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினர் மரியாதைக்குரிய தொல். திருமாவளவன் எம்பி மற்றும் மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு ஆகியோர் கலந்து வருகை புரிந்தனர்.
இப்போட்டியில் சுமார் 1000 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இவருடைய பிரிவில் 60 மாணவிகள் கலந்து கலந்து கொண்டனர்… அதில் S. கமலயாழினி மான்ஃபோர்ட் பள்ளி மாணவி 54 எடை பிரிவில் வெண்கலம் வென்று திருச்சிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
இதனை அறிந்த பள்ளி முதல்வர், இவருடைய கராத்தே பயிற்சியாளர் மாஸ்டர் R. சுதாகர், மாணவர்கள், மாணவியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments