கடன் தொல்லையால் நகை வியாபாரி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி!

கடன் தொல்லையால் நகை வியாபாரி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் ஊராட்சியில் அமைந்துள்ளது சோலை ஹோட்டல். தங்கும் விடுதியுடன் உள்ள ஹோட்டலில் நகைக் கடை வியாபாரி குடும்பத்துடன் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பெரிய கடை வீதியில் வசிக்கும் வெங்கட்ராமன் மகன் பலராமன். தாராபுரம் பகுதியில் எஸ்விஆர் நகை கடை, பைனான்ஸ, தானியமண்டி ஆகியவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகை கடையினை மகன் ஹரி நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வருடம் முன்பு தான் இந்த நகை கடையினை நடிகை ஓவியா திறந்து வைத்துள்ளார். நகை விலை ஏற்ற இறக்கமாக இருந்ததால் சுமார் ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டத்தை ஈடுகட்ட நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் பணத்தினை திரும்ப கேட்டுள்ளனர். பணத்தினை திருப்பி கொடுக்க முடியாததால், கடந்த ஒரு வாரமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். 

Advertisement

திருச்சி லால்குடியில் உள்ள தனது மருமகள் வீட்டிற்கு நேற்று வந்த அனைவரும் அன்று இரவே தாராபுரம் வீட்டிடற்கு செல்வதாக கூறி மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள சோலை ஹோட்டலில் ஒரே அறையில் தாய், தந்தை, மகன், மருமகள், பேத்தி உள்ளிட்ட 5 பேரும் தங்கியுள்ளனர். வேறெரு அறையில் கார் ஓட்டுநர் அய்யப்பன் தங்கியுள்ளார். இன்று அதிகாலை பலராமன் குடும்பத்தினர் சைனைடு விஷம் குடித்துள்ளனர். விஷம் குடித்த விவரத்தினை தனது கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார் பலராமன். கார் ஓட்டுநர் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் விஷம் அருந்திய அனைவரையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

Advertisement

இதில் 75 வயதான பலராமன் அவரது மனைவி புஷ்பா ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் பலராமன் மகன் ஹரி (38), இவரது மனைவி திவ்யா இவர்களது மகள் 8 வயதான அசோக் ராதா ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வாத்தலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO