லாரியில் ரூபாய் 50 லட்சம் திருடிய 5 நபர் கைது - கார், பைக், அரிவாள் பறிமுதல்.
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே திருச்சி - கரூர் செல்லும் புறவழிச்சாலையில் காமநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் ஆங்கில காய்கள் பீன்ஸ், பீட்ரூட், கேரட், நூல் கோல், இறக்கிவிட்டு வசூல் செய்த பணம் ரூபாய் 50 லட்சத்தை லாரியில் டிரைவர் சீட் அருகில் பெட்டிக்குள் வைத்து டிரைவர் மற்றும் மார்கெட்டில் வசூல் செய்பவர் இருவரும் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளனர்.
அப்போது நின்று கொண்டிருந்த லாரியில் முன்பகுதியில் டிரைவர் சீட் அருகில் வைத்திருந்த ரூபாய் 50 லட்சம் பணத்தை காரில் வந்த மர்ம நபர்கள் பெட்டியை உடைத்து பயங்கர ஆயுதங்களுடன் டிரைவரை மிரட்டிக்கொண்டு காரில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த ஜீயபுரம் டி எஸ் பி பாலச்சந்தர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ் பி வருண்குமார் உத்தரவில், ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர் தலைமையில் 6 தனிப்படை அமைத்து, பணத்தை திருடி சென்ற நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் 13 நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்கின்ற போஸ் (25), திருநெல்வேலி நாங்குநேரியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்கின்ற வெள்ளைபாண்டி (22), மதுரை திடீர்நகரைச் சேர்ந்த உதயநிதி என்கின்ற சூர்யா என்கின்ற வட்டம் சூர்யா (27), திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துமணிகண்டன் (25), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பிரவீன்குமார் (28) ஆகிய 5 பேரை பிடித்தனர்.
இதில் அனைவரும் திருமணம் ஆகதவர்கள், இதே தொழிலாக செய்து வருபவர்கள், இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிபெறி கொள்ளை, ஆள் கடத்தல், ரௌடிசம் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த ஐந்து நபர்களை போலீசார் பிடிக்கும் என்ற போது அவர்கள் பாலத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றனர். அப்பொழுது ஐந்து பேரில் மூன்று நபர்களுக்கு கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டு மீண்டும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கூறியுள்ளதாக தெரிகிறது, இவர்களிடம் ரூபாய் 26 லட்சம், திருடிய 12 லட்சம் மதிப்புடைய கார், இருசக்கர வாகனம், பல கொடூர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்த ஐந்து நபர்களை ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision