50 வகையான தட்டுவடை! 13 வகை சட்னி!! புதிய உதயம்.. இப்ப நம்ம ஊருலங்க!!!

50 வகையான தட்டுவடை! 13 வகை சட்னி!! புதிய உதயம்.. இப்ப நம்ம ஊருலங்க!!!

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை சேர்க்கும் உணவு இருக்கும். திண்டுக்கல் பிரியாணி, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மெக்ரோன், கும்பகோணம் டிகிரி காபி என பல அடுக்கலாம். அந்த வகையில் சேலத்திற்கு பெயர்போனது ‘தட்டுவடை’. பானி பூரி, வடை, போண்டா, பஜ்ஜி, முறுக்கு, மக்காச்சோளம்… இவை பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும். இவை எல்லாம் தாண்டி சில ஊர்களில் சில உணவுப்பொருட்கள் ரொம்பவே ஸ்பெஷலாகவும் வேறு எங்கும் கிடைக்காததாகவும் இருக்கும். மக்கள் ரசனையும் அந்தந்த ஊர் பழக்க வழக்கங்களும் இணைந்த சில உணவுகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அப்படியொரு பெருமை கொண்ட ஸ்நாக்ஸ் தான் தட்டு வடை!

அப்படி என்ன இருக்கிறது இதில்? மாலை நேரத்தில் கண் கவர்ந்து மனம் மயக்கும் ஓர் உணவு… அதன் வண்ணங்களும் நாசியை இழுக்கும் நறுமணமும் நாம் செல்ல வந்த பாதையையே மாற்றும் வல்லமை கொண்டது. நீங்கள் சேலத்துவாசியாக இருந்தால் உடனே ‘தட்டுவடை செட்’ என்று நாவில் சப்புக்கொட்டி சொல்லலாம்!

‘தட்டுவடை செட்’ என்று ஃபேஸ்புக்கில் ரசிகர் பக்கம் கூட உண்டு. அது என்ன தட்டுவடை செட்? நிப்பட், தட்டை, தட்டு முறுக்கு, தட்டுவடை எல்லாமே கிட்டத்தட்ட ஒன்றுதான். ரோஜாவை என்ன பெயரில் அழைத்தால் என்ன? ஆனால், அது செட் ஆகும் போதுதான் சுவாரஸ்யமே!

தட்டுவடையின் ஸ்பெஷல் அதில் வைத்துத் தரப்படும் சட்னிதான்பா! இவ்வளவு பெருமைகள் கொண்ட சேலத்து தட்டுவடை இப்போது நம்முடைய திருச்சியிலும் மாலை நேரங்களில் சுட சுட சுண்டி இழுக்கிறது.

இவ்வளவு சுவைக்கொண்ட சேலத்து தட்டுவடை இப்போது நம்ம திருச்சியிலும் கிடைக்கிறது!! திருச்சி தில்லைநகர் 11வது கிராஸில் பேமஸ் தட்டுவடை கடை நம்முடைய திருச்சி மாநகரில் தட்டு வடைக்கென காலடி எடுத்து வைக்கிறது. மாலை நேரங்களில் திருச்சி வாசிகளின் நாச்சுவையை மேலும் அதிகமாக்க புதிய உதயமாக சேலம் தட்டுவடை இப்போது நம்முடைய திருச்சியிலும் கிடைக்கிறது.

இதுகுறித்து கடை உரிமையாளர் ஆனந்த் உடன் பேசினோம்….”சேலத்தில் மிகவும் பிரபலமான தட்டுவடை நம்முடைய திருச்சியிலும் கொண்டுவருவதற்காக இக்கடையை ஆரம்பித்துள்ளோம். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இங்கு சுடசுட தட்டு வடை கிடைக்கும். 50 வகையான தட்டுவடைகளும் மற்றும் 13 வகையான சட்னி வகைகளும் தருகிறோம். திருச்சியில் வேறு யாரும் தரமுடியாத அளவிற்கு தரமானதாகவும் செய்து தருகிறோம். குழந்தைகளுக்கு என நான்கு வகையான தட்டுவடைகளையும், காரம் அதிகமாக தேவைப்படுபவர்களுக்கு அவர்களுக்கு தனியாக சட்னியும் செய்து வருகிறோம். ஒருமுறை வந்து சாப்பிட்டு பார்த்தால் நீங்களும் தட்டு வடை அடிமையாகிவிடுவீர்கள் என்கிறார்,”