திருச்சி மாநகரில் 10 லட்சம் மதிப்புள்ள 550 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் 10 லட்சம் மதிப்புள்ள 550 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்பண்ணை லட்சுமிபுரத்தில் உள்ள குடோனில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர்.

இச்சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்புள்ள 27 மூட்டைகள் இருந்த 550 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், குடோன் உரிமையாளர் ராஜேஷ் என்பவரை கைது செய்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

10 லட்ச ரூபாய் சந்தை மதிப்பு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளரை கைது செய்த காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தை படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். மேலும் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை எச்சரிக்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn