திருச்சி மாநகரில் பணியாற்றி வந்த 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 போலீசார் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து நேற்று தமிழக டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதில் திருச்சி மாநகரில் தனிப்படையில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் வெற்றிச்செல்வன், தலைமை காவலர் இன்ஸ்டீன் ஆகியோர் திருவாரூர் மாவட்டத்திற்கும், தனிப்படையில் பணியாற்றி வரும் சரணவன், ஜேக்கப் ஜானி ஆகியோர் வேலூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த மாதம் திருச்சி மன்னார்புரத்தில் கஞ்சா வியாபாரின் காரில் 3 கிமீ தூரம் தொங்கியபடி சென்று பிடித்தவர் தனிப்படை போலீஸ் சரவணன். சிறப்பாக செயல்பட்டதற்கு தலைமை காவலர் சரவணனை மாநகர கமிஷனர் அருண் பாராட்டினார்.
இதுப்பற்றி தகவலறிந்து டிஜிபி சைலேந்திரபாபு போனில் பாராட்டி அன்பளிப்பு வழங்கினார். இந்த நிலையில் சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது காவல்துறையினர் மத்தியில் குழப்பத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn



            
            
            
            
            
            
            
            
            
            


Comments