திருச்சியில் 7 நாட்கள் நடைபெறும் நவீனரக ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கண்காட்சி

திருச்சியில் 7 நாட்கள் நடைபெறும் நவீனரக ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கண்காட்சி

'விடுதலையின் அம்ரித் மகோத்சவம்' என்று கொண்டாடப்படும் இந்திய திருநாட்டின் 75வது ஆண்டு சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 75வது சுகந்திரதின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவின்படி, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சி தொடங்கியது.

19.12.2021ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியினை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலிகாட்சி மூலம் தொடங்கிவைத்தார். நாடுமுழுவதும் திருச்சி உள்ளிட்ட 75 இடங்களில் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஜுனியர் ஸ்டாப் கிளப்பில் முப்படைகளில் பயன்படுத்தப்படும் பிஸ்டல்கள், லாஞ்சர் மற்றும் கப்பல்களில், நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகள் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள் முதல் நவீனகால ஆயுதங்கள் வரையிலும், மற்றும் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான துப்பாக்கிகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வருகைதந்து ஆயுதங்களின் அழகிய கண்காட்சியினை ஆர்வமுடன் பார்வையிட்டு தங்களின் புகைப்படங்களில் பதிவுசெய்தும், ஆயுதங்களின் திறன், செயல்பாடு குறித்தும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர். பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பார்வையிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியானது புகைப்படங்கள், திரைப்படங்களில் பார்த்த்திருந்த ஆயுதங்களை நேரில் பார்க்கவும், முப்படைகளின் ராணுவ பலத்தை தெரிந்துக்கொள்வதுடன் இளம்தலைமுறையினர் ராணுவத்தில் சேர ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளது என்று கண்காட்சியினை பார்வையிட்டவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn