திருச்சியில் 8 கோடியே 50 லட்சம் மதிப்பிட்டில் உருவான நீராவி ரயில் இன்ஜின் 

திருச்சியில் 8 கோடியே 50 லட்சம் மதிப்பிட்டில் உருவான நீராவி ரயில் இன்ஜின் 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலானது கடந்த 112 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. நீராவியால் இயக்கப்பட்டு வந்த மலை ரயிலானது சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 8 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கோல்ட் பிரட் எனப்படும் நிலக்கரியால் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் என்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு இரவு பகலாக தொழில்நுட்ப பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தற்போது அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்த மலை ரயில் இன்ஜினில் சுமார் 3600 பாகங்கள் உள்ளன. அவற்றில் 1400 பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமனையில் மீதமுள்ள பாகங்கள் தமிழகத்தில் கோவை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாங்கி வரப்பட்டு முற்றிலும் இந்திய தயாரிப்பாக மலை ரயில் உருவாக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 4200 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க், 3.5 டன் எடை நிலக்கரியும் இதில் எரிபொருளாக எடுத்துச் செல்லமுடியும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை நான்கு நீராவி என்ஜின்கள் பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்டு பர்னஸ் ஆயில் மூலம் எரிக்கப்பட்டு நீராவியால் இயக்கப்படுகிறது. இந்த முறை ரயில்கள் வண்ணத்திலும் வடிவமைப்பிலும் ஈடு இணை கூறமுடியாத அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 10 முதல் 11 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த மலை ரயில் ஊட்டிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருச்சி பொன்மலை பணிமனையில் நடைபெற்றது. இந்த நீராவி ரயில் இன்ஜினை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் மலை ரயில் இன்ஜினை ஆய்வு செய்த அவர் ரயில் ஓட்டுநர்களுக்கு பரிசு வழங்கினார். இதனையடுத்து மலை ரயில் இன்ஜின் டிரெய்லர் லாரி மூலம் மேட்டுப்பாளையத்தில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நீலகிரிக்கு தனது பயணத்தை தொடங்க உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn