திருச்சி மாவட்ட வருவாய்த் துறையில் பணியாற்றி வந்த 8 தாசில்தார்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி கிழக்கு தாசில்தார் லோகநாதன், முசிறி தாசில்தாராகவும், தொட்டி யம் தாசில்தார் அருள்ஜோதி, முசிறி கோட்டக் கலால் அலுவலராகவும், அங்கிருந்த சேக்கிழார், தொட்டியம் தாசில்தாராகவும், திருச்சி கிழக்கு சமூக பாதுகாப்புத் திட்டதனி தாசில்தார் சக்திவேல் முருகன், திருச்சி கிழக்கு தாலுகா தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி கோட்ட கலால் அலுவலராக இருந்த தனலட்சுமி, திருச்சி கிழக்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், விடுப்பில் இருந்த தாசில்தார் செல் வசுந்தரி, திருச்சி கோட்ட அலுவலராகவும், திருச்சி மேற்கு தாலுகாஉணவு பொருள் வழங்கல் தனி தாசில்தாராக இருந்த தமிழ்க்கனி, திருச்சி தேசிய நெடுஞ்சாலை நில மெடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ராஜேஷ்கண்ணன், திருச்சி மேற்கு உணவுப் பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பிறப்பித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments