திமுக அரசின் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

திமுக அரசின் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டியில் மணப்பாறை ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரையாற்றும் போது, வாக்குறுதிகள் கூறி தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். இன்று 80% மேலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்றான மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திட்டத்தை பற்றி சட்டப்பேரவையில் கலந்தாய்வு முடித்துவிட்டு உறுதியுடன் தைரியமுடன் உங்கள் முன் பேச வந்துள்ளோம் என்று கூறினார்.

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தான் சிறந்த முதலமைச்சர் என்றும் வடநாட்டைச் சார்ந்த ஒரு பத்திரிக்கை கூறுகிறது என பெருமையுடன் கூறினார். பல அடக்குமுறைகளைக் கடந்து நிற்பது தான் நம் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் கூறினார். எத்தனை அடக்குமுறைகள் இருந்தாலும் அதனை கடந்து வெற்றி பெற்றவர்தான் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

நம்முடைய முதலமைச்சர் நாட்டை வெற்றி பாதையில் கொண்டு செல்வதற்காக உழைத்து கொண்டிருக்கிறார். அவர் கரத்தை வலுப்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே நாடாளுமன்றமும் நமதே நாடாளுமன்ற உரிமையும் நமதே என்ற அளவிற்கு நாம் பணியாற்ற வேண்டும் என கூறினார். உழைப்பது நாமாக இருந்தாலும் உதிப்பது உதயசூரியனாக இருக்கட்டும் என பெருமையுடன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், பொருளாளர் குணசேகரன்,செங்குட்டுவன், ஒன்றிய தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,சின்ன அடைக்கன், பழனியாண்டி, ராஜேந்திரன்,நகரச் செயலாளர் செல்வம் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கிருஷ்ணகோபால் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராள மான கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn