திருச்சி மாவட்டத்தில் ஆண்டிற்கு 90 முதல் 100 வரையிலான கொலை வழக்குகள்: ஆய்வாளர்கள் பாராட்டு விழாவில் டிஐஜி பேட்டி:

திருச்சி மாவட்டத்தில் ஆண்டிற்கு 90 முதல் 100 வரையிலான கொலை வழக்குகள்: ஆய்வாளர்கள் பாராட்டு விழாவில் டிஐஜி பேட்டி:

கொலை குற்றங்களில் தண்டனை வாங்கி தந்த ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாராட்டுவிழா இன்று நடைபெற்றது. பின்பு டிஐஜி பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது… “வருடத்திற்கு 90லிருந்து 100 கொலைகள் சொத்து தகராறு காரணமாக நடப்பதாகவும் 2019ஆம் ஆண்டு மட்டும் 17 வழக்குகளுக்கு தண்டனைகள் வாங்கி தரப்பட்டுள்ளது. பி.எச்.எல். வங்கி கொள்ளை தொடர்பாக இதுவரை 75 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வங்கி ஊழியர்களிடமும் பி.எச்.எல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்படும் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றார். கடந்த மாதம் 1கோடியே 47 லட்சம் பெல் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் அவர்கள் கூறுகையில்..பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பாக இன்னும் 10 நாட்கள் காவலில் முருகனை எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் 3 கிலோ 700 கிராம் கொள்ளை போனதில் இதுவரை இரண்டு கிலோ 700 கிராம் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.

முன்னதாக திருச்சி சரகத்தில் 17 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த விசாரணை அதிகாரிகள், நீதிமன்ற காவலர்கள், சாட்சிகள் உள்ளிட்ட 65 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
5 மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி சரகத்தில் ஆண்டிற்கு 90 முதல் 100 வரையிலான கொலை வழக்குகள் பதியப்படுகிறது. இதில் சொத்து தொடர்பான கொலை வழக்குகளும், குடும்ப பிரச்சனை தொடர்பான கொலை வழக்குகளும் அதிகமாக காணப்படுகிறது.இவற்றை தடுப்பதற்கும் கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உணர்த்தும் விதமாக இந்த விழாவானது நடத்தப்பட்டது.