காணாமல் போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 98 செல்போன்கள் மீட்பு.

காணாமல் போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 98 செல்போன்கள் மீட்பு.

இன்று (12.06.24)-ந்தேதி "குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்”-யை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையகரத்தில், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்றும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டோம் என்றும்,

குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு தங்களால் இயன்றவரை பாடுபடுவோம் என்றும், காவல் ஆணையர் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உறுதிமொழி எடுத்துக்கொன்டனர்.

மேலும், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ரூ.20 இலட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 98 ஆன்டிராய்டு செல்போன்கள் அதன் உரிமையாளிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, ஒப்படைத்தார்.

மேலும், திருச்சி மாநகர பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 34 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு கான சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டி அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சிறப்பு முகாமில், காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு, காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision