திருச்சி மாநகர ஆயுதபடை காவலராக பாசில்கான் பணிபுரிந்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி மன்னார்புரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த பொழுது நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானார். இரு சக்கர வாகனத்திலிருந்து பலமுறை சாலையில் உருண்டு சில மீட்டர் தூரம் இருசக்கர வாகன வேகத்துடன் விழுந்தார்.
அவர் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் உயிர் தப்பினார். உடம்பிலும்,கை கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. தற்பொழுது 10 நாட்கள் மருத்துவ விடுப்பில் உள்ளார். இக்காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments