சென்னையிலிருந்து சுமார் 20 டன் எடை கொண்ட இரும்பு ராடுகளை 16 பேர் கொண்ட கனரக லாரியில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முத்துகிருஷ்ணன் (32) ஓட்டுநர் லாரியை சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக தூத்துக்குடிக்கு ஓட்டி வந்தார்.
அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் காவல் நிலையம் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற முத்துகிருஷ்ணன் அவரது கட்டுப்பாட்டை மீறிய கனரக லாரி முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது.
இதனால் லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி அந்த இடிபாடுகளில் சிக்கி லாரி டிரைவர் முத்துகிருஷ்ணன் பலியானார் இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநர் முத்து கிருஷ்ணனின் உடலை சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மீட்புக்குழுவினர் சமயபுரம் போக்குவரத்து காவலர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் உடலை மீட்டனர்.
இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த ஓட்டுனர் முத்துகிருஷ்ணன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments