நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் தேர்தலை சந்திக்க உள்ளது தனது கூட்டணி கட்சிகளுடன் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுக்கான சீட் பங்கீடு தொடர்பாக திமுகவின் முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே. என் .நேரு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடைபெற்று வந்தது.65ல் திமுக 50 வார்டில் போட்டியிட போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மீதமுள்ள 15 வார்டுகள் பங்கீடு கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் திருச்சி மாநகராட்சியில் 8 கோட்டங்களை வைத்துள்ளது. தங்களுக்கு எட்டு வார்டுகள் வேண்டும் என முதலில் திமுகவிடம் பேச்சுவார்த்தை துவங்கியது .திமுகவோ 4-வார்டு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் வார்டு பங்கீடு தொடர்பான கூட்டத்தில் இருந்து வெளியேறியது .பின்பு அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டத்தை நடத்தி தங்களுக்கு குறைந்தபட்சம் 8 வார்டுகள் கொடுக்கவேண்டும் என்ற முடிவு செய்துள்ளனர்.

மேலும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வந்து நாளை திமுக அமைச்சரும் முதன்மை செயலாளருமான நேருவிடம் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேசிய பிறகும் நான்கு வார்டுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என திமுக அறிவித்தால் கூட்டணியை விட்டு விலகி 65 வார்டுகளில் காங்கிரஸ் களமிறங்கப் போவதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திருச்சியில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு தொகுதிகளை விட்டுக் கொடுத்ததாக பேசிவருகின்றனர் .இந்நிலையில் திருச்சியில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலை ஏற்படுமோ என்ற பரபரப்பில் இரு கட்சி தொண்டர்களும் உள்ளனர்.
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments