சென்னையில் மாநில உணவு பாதுகாப்பு துறையின் மாநில ஆய்வு கூட்டம் உணவு பாதுகாப்பு துறையின் மாநில ஆணையர் டாக்டர்.P.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 21 செயல்திறன்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையின் செயல்திறன் தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது. இதுக்குறித்து உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர், டாக்டர்.R.ரமேஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழகத்திலேயே முதன்மை மாவட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை இலக்கை அடைந்ததற்கு முழு ஒத்துழைப்பும், ஊக்கமும் அளித்த மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும், உணவு வணிகர்களுக்கும்,
பொதுமக்களுக்கும் மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்கள் உணவு பாதுகாப்பு துறை சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என்று உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர், டாக்டர்.R.ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO







Comments