திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாளையம் ஐயாற்றப்படுகையில், கருப்பையா என்பவரது தென்னந்தோப்பில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சிறுகாம்பூரைச் சேர்ந்த ராஜா, துணை முகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திவாகர், தெற்கு சீதாம்பூரைச் சேர்ந்த சிவகுமார், துணைமுகநல்லூரைச் சேர்ந்த சக்திவேல், மணப்பாளையம் கருப்பையா ஆகியோர் சேவலை வைத்து சண்டைக்கு விட்டு பணம் கட்டிய சூதாடிக் கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து அவர்களை சுற்றி வளைத்த போலீசார் திவாகர், சிவக்குமார், சக்திவேல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு சண்டை சேவல்கள், 25 ஆயிரத்து 100 ரூபாய் ரொக்கம், 10 டோக்கன்கள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments