இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் நாளை (27.06.2023) செவ்வாய் கிழமை காலை 10:30 மணி அளவில் தோகைமலை வட்டாரம், R.T.மலை அருகில், புழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில்

(KVK) பண்ணையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் (Drip irrigation) பயன்பாடு மற்றும் பராமரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் சொட்டுநீர் பாசனம் அமைத்தல், பயன்படுத்தும் முறைகள், பராமரித்தல், குழாய்களில் மணல் மற்றும் உப்பு படிதலை அகற்றுதல், சொட்டுநீர் வழி உரப்பயன்பாடு குறித்த பயிற்சி செய்முறை விளக்கத்துடன் அளிக்கப்படும். எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முன் பதிவு மற்றும் ஆலோசனை செய்ய 96590 98385 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision







Comments