2023 – 2026 ஆண்டுக்கான திருச்சிராப்பள்ளி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், 6 துணை தலைவர்கள் 2 இணை செயலாளர்கள் ஆகிய 11 பொறுப்புகளை தேர்ந்தெடுக்க தேர்தல் வரும் (23.09.2023) அன்று நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் 153 ஆயுள் கால உறுப்பினர்களும், 61 கிளப் உறுப்பினர்களும், வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். தேர்தல் அதிகாரி தனபால் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட கிரிக்கெட் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 2012 முதல் இச்சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த முறை முக்கிய பதவிகளுக்கு கடுமையான போட்டி இருக்கும் என சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு பரபரப்பாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க தேர்தல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.
இணைசெயலாளர் பதவிக்காக A.செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 11 பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விறுவிறுப்பாக வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments