திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து இன்டிகோ விமானம் வந்து சேர்ந்தது. அப்போது விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி கொண்டு வந்த உடைமையில் ஏர் டை கிரைண்டரில் உருளை வடிவில் மறைத்து கொண்டு வரப்பட்ட 159 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதன் மதிப்பு 9 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments