Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை மறுநாள் (03.03.2024) அன்று 267 மையங்களில் இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

நாடு முழுவதும் போலியோ நோயை முற்றிலும் ஒழித்திடும் வகையில் வருகின்ற (03.03.2024) ஞாயிற்றுக் கிழமை முதல் தவணையாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும்.

வருகின்ற (03.03.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 07:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 60613 குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 267 சிறப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி நகர் நல மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே நிலையம்,

விமான நிலையம், பேருந்து நிலையங்கள், சுற்றுலா பகுதிகள் ஆகிய இடங்களில் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிறமாநிலங்கள், மாவட்டங்¦களிலிருந்து இடம் பெயர்ந்து தொழில் புரிவதற்காக வந்து தங்கியுள்ள குடும்பங்¦களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்துகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செயயப்பட்டுள்ளன.

இதற்கென 1036 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் தொண்டுள்ளம் படைத்தவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *