திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினமான (15.08.2024) அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது…… திருச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் விவாதித்தல், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை வாசித்து காண்பித்து ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை மற்றும் இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல்,

தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்குகள் (TNPASS), தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் உயிர் பல்வகைமை மேலாண்மை குழு (BMC), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் வரவு. செலவு திட்டத்தினை ஜீலை 31 வரையிலான முன்னேற்ற அறிக்கையினை ஒப்பிட்டு விவாதித்தல், (2024-25) ஆம் ஆண்டு வளர்ச்சி திட்டம், பயனாளிகள் பட்டியல் ஒப்புதல்,

கிராம ஊராட்சி திட மற்றும் திரவ கழிவு மேலாண்மைகளில் தன்னிறைவு பெற்றமையாலும் தூய்மையான கிராமமாக விளங்குவதை உறுதிபடுத்தி ‘முன் மாதிரி கிராமம்” (ODF Plus Model) என அறிவிப்பு செய்தல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளளப்பட்டு வரும் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 10% சமூக பங்களிப்பு பெறப்பட்டு கிராம ஊராட்சியின் குடிநீர் விநியோக பணிகளில் பயனாளிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்தல் குறித்தான பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளது.

சுதந்திர தினமான (15.08.2024) அன்று காலை 11:00 மணிக்கு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து வாக்காளர் பெருமக்களும் கலந்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 09 August, 2024
 09 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments