திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் வரையிலான பேருந்து இயக்கத்தை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இன்று (19.08.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி புதிய பன்னாட்டு விமான நிலையம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புதிய பன்னாட்டு விமான நிலையத்திற்க்கும் திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலைக்கும் சுமார் 1 கிலோ மீட்டா தொலைவில் இருப்பதால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் வரையிலான, பேருந்து இயக்கம் இன்று (19.08.2024) தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று (19.08.2024) முதல் தினசரி 6 நடைகள் நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் சென்றுவர பேருந்து இயக்கம் செய்ய கீழ்கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments