திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாகவும், சாதிக் என்கிற அன்வர் பாஷா என்பவர் பொது வினியோகத்திட்ட அரிசி 85 மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் உணவுப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் சத்யபாமா, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவரான சாதிக் என்கிற அன்வர் பாஷாவை கைது செய்தனர். அதே இடத்தில் அவரது மனைவி அவருக்கு சொந்தமான டாட்டா ஏசியில் 21 மூட்டை ஏற்றுக் கொண்டிருந்தபோது வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் உடன் சென்று அவற்றை கைப்பற்றி குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் டாட்டா ஏசி வண்டியை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சாதிக் பாஷா என்பவரின் மனைவியின் பெயரை கேட்ட பொழுது அவர் கூற மறுத்துவிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அவர்கள் தற்போது தான் வந்துள்ளனர் என்பதால் தங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvison
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           3
3                           
 
 
 
 
 
 
 
 

 24 August, 2024
 24 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments