அரசு ஆதிதிராவிட நலபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ்வழி வரலாறு பிரிவு (வரலாறு வணிகவியல் பொருளியல் தமிழ் ஆங்கிலம் உள்ளடக்கியது)போதுமான இடவசதி ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று கூறி வரலாறு பிரிவை நீக்கிவிட்டனர்.
இதனால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் வேறு பள்ளியில் சேரும் சூழ்நிலை உருவானது. எனவே இந்த ஆண்டு வரலாறு பாடப்பிரிவு மீண்டும் தொடங்க ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் இதேபோன்று ஆங்கில வழிக் கல்வியில் பிளஸ் +2 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் கடந்த 2024

ஆம் ஆண்டு போதுமான இடவசதி ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று காரணம் காட்டி தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக இந்த பாடப்பிரிவை நீக்கிவிட்டார். இதனால் பிளஸ் ஒன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பயின்ற மாணவிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் இதனால் மாணவிகள் கல்வித்தரம் கேள்விக்குறியாகிவிட்டது இதனால் வரும் கல்வியாண்டில் நீக்கப்பட்ட
தமிழ் வழி வரலாறு பிரிவும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவு மீண்டும் தொடங்கி மாணவர்கள் எதிர்காலத்தை சிறப்படைய செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பள்ளி மேலாண்மை குழு முன்னால் துணைத் தலைவர் s. S ரஹமத்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments