சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் இணைந்து
உலக இயற்கை பாதுகாப்பு தினம் நிகழ்ச்சியை மரக்கன்றுகள் வழங்கி பள்ளி மாணவர்களுடன் கொண்டாடியது

இயற்கை வளங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூலை 28-ந் தேதி ‘உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று தென்னூர் சுப்பையா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் சார்பில் மாணவர்களுக்கு மர கன்றுகள் வழங்கி, அவற்றை பாதுகாப்பாக காத்து வளர்த்திட கம்பி வேலி வழங்கப்பட்டது

பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுசூழல் மன்ற தலைவர் ஆசிரியை சரண்யா அவர்கள் மாணவர்களிடம் கூறுகையில்,
மனிதன் உள்பட உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. இவற்றுக்கு அடிப்படையான இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும்.

நவீனமயமாதல் என்ற பெயரில் பசுமைக்காடுகள், மரங்கள், உயிரினங்கள், விளை நிலங்கள், நீர் நிலைகள் என உலக அளவில் இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன.

உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 1948-ம் ஆண்டு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூலை 28-ந் தேதி ‘உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
இதில் மரங்களை நடுவது ஒரு உன்னதமான நடைமுறை.
இது மண் அரிப்பு சம்பவங்களை குறைக்க உதவும். சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. இது சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கும் உதவுகிறது . தாவரங்கள் பல பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வீடுகளாகவும் செயல்பட முடியும்.

மரம் வளர்த்தல் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும். வருங்கால தலைமுறைக்கு தொழில்நுட்பம், பொருட்செல்வம் ஆகியவற்றைவிட, இயற்கை வளங்களையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் விட்டுச்செல்வதே சிறந்தது என பேசினார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://t.me/trichyvision



Comments