திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எம்டி சாலையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எம் டி சாலையில் உள்ள சமுதாயக் கூட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகமது நகராட்சி தலைவர் காயம்பூ தலைமைவகித்தார். நகராட்சி ஆணையர் பட்டுசாமி திருவெறும்பூர் தாசில்தார் செயபிரகாசம், சமூகத் திட்ட தனி தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நத்தம் பட்டா துவாக்குடி பென்னகரை சேர்ந்த சூரிய குமாரி அக்பர் சாலை சேர்ந்த ராஜேஷ்குமார் ராவுத்தான் மேடை சேர்ந்த சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கினார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
முகாமில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு துறைஅதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments