பெட்டவாய்த்தலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் ATM-ல் பணம் வரவில்லை என நினைத்து ATM-யை விட்டு வெளியில் வந்து வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் அதே ATM-ல் பணம் எடுக்க வந்த கல்லூரி மாணவர் திரு.ஸ்ரீதர் என்பவர் ATM- ல் 9000/- ரூபாய் பணம் வெளியில் வந்திருந்த நிலையில் இருந்ததை கண்டு, அந்த பணத்தை மீட்டு அருகில் இருந்த பெட்டவாய்த்தலை செக்போஸ்டில் பணியில் இருந்த காவலர்களிடம் ஒப்படைத்தார்.

செக்போஸ்டில் பணியில் இருந்த தனிப்பிரிவு காவலர் திரு.முத்து செல்வன் மற்றும் பெட்டவாய்த்தலை காவல்நிலைய காவலர் திரு.செல்வமணி ஆகியோர் கல்லூரி மாணவர் ஒப்படைத்த பணத்தை தவறவிட்ட பெண்மணி யார் என்பதை சிசிடிவி உதவியுடன் கண்டறிந்து தவறவிட்ட பணத்தை அவரிடமே ஒப்படைத்தனர்.

கல்லூரி மாணவர் ஸ்ரீதரின் இச்செயலினை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் அவர்கள் மாணவனை நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments