Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லஞ்ச வழக்கில் முன்னாள் இளநிலை உதவியாளர் 3 ஆண்டு சிறை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக (கிளார்க்) பணியாற்றிய T.ரெங்கராஜன் தந்தை பெயர் திருமேனி என்பவர், லஞ்சம் பெற்ற வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

நா.மாரியப்பன் அவர்கள், திருச்சி மாவட்டம் அரங்கநாயகி அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர். பின்னர்,13.11.2008 அன்று பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுபெற்றார். இத்தொடர்பாக, ஆறாவது ஊதியக்குழு அமலுக்கு வருவதற்கு முன் மாநில அரசு அறிவித்த இடைக்கால நிவாரணமாக மூன்று மாத ஊதியம்,7.5 மாத நிலுவை ஊதியம் மற்றும்M.A. படிப்பிற்கான ஊக்கத்தொகையை பெற விண்ணப்பித்திருந்தார்.

இந்த தொகைகளை வழங்குவதற்காக, அவரே பணிபுரிந்த பள்ளியின் கிளார்க் ரெங்கராஜன் ரூ.2,000 லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 30.09.2009 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. 01.10.2009 அன்று லஞ்சப் பணத்தை பெறும் போதே ரெங்கராஜன் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.நீதிபதி திரு.புவியரசு இன்று (30.07.2025) தீர்ப்பு வழங்கினார்.அதில்லஞ்சம் கேட்டதற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல், ₹5,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை)

அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல்₹5,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை)இவ்விரு தண்டனைகளும் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
வழக்கை நேர்த்தியாக நிரூபித்த போலீசார்
DSPதிரு.மணிகண்டன் ஞா.சக்திவேல்
அரசு தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தண்டனை பெற்று தந்தார்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *