இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் தேச உணர்வை தட்டிஎழுப்பிய, இந்தியாவின் வெற்றி சரித்திரத்தையும், ஒருமைப்பாட்டையும் பறைசாற்றும் வந்தேமாதரம் தேசபக்தி பாடலின் 150வது ஆண்டுவிழாவை கொண்டாடும்விதமாக நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகிறது.
இதன் ஒருபகுதியாக, போசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் போசம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ,
மாணவிகள் அனைவரும் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி முன்னிலையில் வந்தேமாதரம் பாடலின் 150ஆவது ஆண்டை குறிப்பிடும்விதமாக 150 என்ற எண் வடிவத்தில் அமர்ந்து, வந்தே மாதரம் பாடலை பாடி, ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments