Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தாட்கோ மூலம் IATA பயிற்சி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளையோருக்கு சர்வதேச விமான நிலைய வேலை வாய்ப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-CANADA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமாக கேபின் க்ரூவ் (Cabin Crew), விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி (Air Cargo Introductory + DGR) பயணியர் சேவை மற்றும் பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி (Foundation in Travel And Tourism) மற்றும் போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த 18 முதல் 23 வயது நிரம்பிய பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் இப்பயிற்சியிக்கான கால அளவு ஆறுமாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் IATA-International Air Transport Association-Canada மூலம் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் பயிற்சி சான்றிதழ் உள்ளவர்கள் தனியார் விமான நிறுவனங்களிலும் (Indigo Airlines, Spice Jet, Go First, Air India), சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம்.

ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000/- முதல் ரூ.22,000/- வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- ஊதிய உயர்வு பெறலாம்.

இதுனால் வரை தாட்கோ மூலம் விமான சேவை பயிற்சி பெற்ற 200 நபர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களான Indigo, Air India, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange போன்ற விமான நிறுவன சேவை மையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணைதளம் WWw.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி 620 001 (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *