திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய தேதிகளி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம், சிறப்பு உதவி முகாம் நடைபெறுகிறது மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், அவர்கள் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 -ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் பொருட்டு,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிரத்திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கிட்டு படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, எதிர்வரும் 22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை செயல்படவுள்ளது.


கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் அனைவரும் மேற்கண்டுள்ள உதவி மையங்களை பயன்படுத்தி கொண்டு, கணக்கிட்டு படிவங்களை பூர்த்தி செய்து அதனை மீள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்திடவும் என மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments