ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7ம் நாள் – ஆண்டாள் முத்துக்கொண்டை அணிந்து, வைரக்கல் அபயஹஸ்ம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி நம்பெருமாள் சேவைசாதித்தார்

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதும், பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, இராப்பத்து என 21நாட்கள் கடந்த 19ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதன் திருவாய்மொழி எனப்படும் பகல்பத்து உற்சவத்தின் 7ம் திருநாளான இன்றையதினம் காலை, நம்பெருமாள் ஆண்டாள் முத்துக்கொண்டை அணிந்து, வைரக்கல் அபயஹஸ்தம், மார்பில் மகரகர்ண பத்ரங்களுடன் மகாலட்சுமி பதக்கம், மகரகண்டிகைகள், பவழமாலை, முத்துமாலை, வெள்ளைபக்ஷி பதக்கம், புஜகீர்த்தி அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, ராமானுஜர், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் தொடர்ந்து வர அரையர்கள் பாசுரங்களை கேட்டவாறு பிரகாரங்களில் வலம்வந்து பின்னர், அர்ஜுனமண்டபத்தில் எழுந்தருளி, பன்னிரு ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளச்செய்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளி வருகிறார்.

வரிசையில் நின்று காத்திருந்த பெருந்திரளான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு நம்பெருமாளை சேவித்துச் சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments