திருச்சி பாலக்கரை, வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள பேட்டரி வாகனம் விற்பனை கடை மற்றும் குடோனில் தீ விபத்துஏற்பட்டது. வேகமாக தீ எரிந்ததால் அருகில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும்கரும் புகை அதிகம் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments