பெரம்பலூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் ஒரு கூட்டணியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகத நிலையில் திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என அன்புமணி கூறுவது நகைப்புக்குரியது.
கூட்டணியில் பங்கு ஆட்சியில் பங்கு தற்போது உங்கள் நிலைப்பாடு
இதற்கு ஏற்கனவே பலமுறை பதில் தெரிவித்து விட்டேன்.
ஒரு கட்சி முன்கூட்டியே வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு நிலைப்பாடு அல்ல.
உரிய நேரத்தில், முறைப்படி
முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவோம். சில நிலைப்பாடுகள் காலம் நேரம் கருத்தில் கொண்டு எடுக்க முடியும்.
பாமக திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன ?
யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது.
தொடர்ந்து செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கேள்விக்கு.
செவிலியர்களுக்கான போராட்டம் முடிந்துவிட்டது. அதற்கு அமைச்சர்
பணி நிரந்தரமும் குறித்தும் தெரிவித்துவிட்டார்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாகவே ஏற்கனவே முதலமைச்சர்ருக்கு கோரிக்கை வைத்துள்ளேன் தொடர்ந்து அதே கோரிக்கை எப்போதும் முன் வைக்கிறேன். மதுரை முதலமைச்சர் பரிசிலீக்க வேண்டும்.
ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளோம்.
திமுகவில் தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்பது போல தாங்கள் பேசியிருப்பது குறித்து
திமுகவுக்கு சிலர் பரிந்து பேசுகிறோம் என்றும், முற்றுக் கொடுக்கிறோம் என்றும் விமர்சனங்கள் வெளிப்படையாக வருவதால் நாங்கள் அதற்காக பேசவில்லை கருத்தியாலுக்காக பேசுகிறோம். நாங்கள் உள்வாங்கிக் கொண்ட சமூக நீதி, பெரியார், அம்பேத்கர் மார்க்சிய அரசியல் அதுதான் எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண்டாம் பட்சம்தான் என்பதை சொல்வதற்காக அதனை அழுத்திக் கூறினேன்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர் மீது தேவாலயக்ளத்திலே தாக்கல் நடத்தப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு
இதற்காகத்தான் பிஜேபி வளரக்கூடாது என்று சொல்கிறோம்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ அமைப்புகள் கிறிஸ்துவ மக்கள் மீதும் கிறிஸ்துவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதுதான் பாசிசம் என்பதற்கு சான்று.
இப்படி நடக்கும் என்று பிரதமருக்கு தெரியும்.
இதை திசை திருப்பவே பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் கலந்து கொண்டு உள்ளார். ஒருபுறம் சனாதான சக்திகள் தாக்குதலை ஒரு அவலம் நடக்கிறது.
மதவாத சக்திகளை ஆர் எஸ் எஸ் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புக்கள் துணை போகிறது. அவர்கள் மதவெறியர்களை காலூன்று வைக்க போகிறார்கள். மற்ற மாநிலங்களில் நடந்த அவலம் தமிழ்நாட்டிலும் நடக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க இந்தளவிற்கு ஆட்டம் போட காரணமே அதிமுக தான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக இல்லாமல் போய்விடும் பெரியார் அரசியலும் இல்லாமல் போய் விடும்.
நான் பெரியாரின் பிள்ளை. அம்பேத்கரின் பிள்ளை சனாதான சக்திகளுக்கு துணை போகும் வகையில் சீமானும் விஜயும் செயல்படுகிறார்கள் என்பதை கூறுகிறேன் அவர்கள் அரசியல், போக்கும், செயல்பாடும் பிஜேபி, ஆர் எஸ் எஸ் க்கு துணை போவதாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ மக்களின் தாக்குதலை பற்றி இதுவரை விஜய் வாய் திறந்து உள்ளாரா. கொள்கை எதிரி என்றால் கொள்கை ரீதியாக விமர்சிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறதா இல்லையா.
அவர்களை கண்டிக்க முடியாது ஏனென்றால் அவர் இடையில் அப்படி ஒரு உறவு இருக்கிறது.
பிராமண கடப்பாரையைக் கொண்டு பெரியார் இருப்பை தகர்ப்பேன் என்பது தமிழ்நாட்டில் போல் இதனை வேடிக்கை பார்க்க முடியாது.
இது சாதாரண அரசியல் அல்ல பெரியார் அரசியல் என்பது எளிய மக்களின் அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல்.
இதனை தகர்ப்பேன் என்பது எப்படிப்பட்டது.
இதுதான் ஆர் எஸ் எஸ் பிஜேபியின் அரசியல் அவர் பிராமணர்களின் கடப்பாரை எடுத்து செயல்பட போகிறாரா அல்ல அவர் பிராமணர்களுக்கு கடப்பாரையாக மாறப் போகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவர் தமிழ் தேசியம் பேசுகிறார் என்று என்னிடம் ஆனால் அவர் பேசுகிறது சனாதான அரசு என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இது திமுக அரசியலுக்கு எதிரான கருத்தல்ல எல்லோரும் பேசுகிற கருத்திற்கு எதிரானது.
திமுகவிற்காக நான் பேசவில்லை நாங்கள் பேசுகிற அரசியலுக்கு எதிரானது கருத்தாகும்.
தமிழகத்தில் ஏற்கனவே கலைஞர் பாஜக உடன் கூட்டணி வைத்தார்?
பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலை பேச கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து தான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments