Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 30.12.2025-ந்தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு 29.12.2025-ம் தேதி மதியம் 14:00 மணி முதல் 31.12.2025-ம் தேதி 14:00 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது.

நகரப் பேருந்துகள் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்து வழித்தடங்கள் அண்ணாசிலை – ஓடத்துறை பாலம் – மாம்பழச்சாலை காந்தி ரோடு – JAC கார்னர், EVS சாலை – ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, பின்பு ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவேரி பாலம், ஓடத்துறை, சத்திரம் பேருந்து நிலையம். செல்லவேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்து வழித்தடங்கள் அண்ணாசிலை – ஒடத்துறை பாலம் – மாம்பழச்சாலை – T.V. கோயில் ட்ரங்க் ரோடு – சோதனை சாவடி எண்.6 – கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது T.V. கோயில் ட்ரங்க் ரோடு வழியாகவே சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும். ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை.
அரசு சிறப்பு பேருந்துகள் தேவைக்கேற்ப மட்டுமே திருவரங்கம் பேருந்து நிலையம் வரவேண்டும். கூடுதலாக வரும் பேருந்துகள் காவல் சோதனைச் சாவடி-6 அருகில் நிறுத்தி வைக்க வேண்டும்.

புறநகர் பேருந்துகள்
சென்னை அரியலூர், பெரம்பலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கத்திலிந்து வரும் பேருந்துகள் CP-6-ல் இருந்து திருவானைக்காவல் வரக்கூடாது. அனைத்து பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் செல்ல வேண்டும்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் ஓடத்துறை, ஒயாமரி ரோடு வழியாக சென்னை புறவழிச்சாலையில் சென்று வர வேண்டும். சரக்கு வாகனங்கள்
திருவரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளுக்குள் சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதியில்லை.

பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய வழித்தடங்கள் மற்றும் வாகன நிறுத்தம் செய்ய வேண்டிய இடங்கள்.
உத்திரவீதிகளில் எவ்வித வாகனங்களும் (காவல்துறை வாகனம் உட்பட) நிறுத்த அனுமதியில்லை.
முக்கிய நபர்களுக்கான வாகன அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள்: (VIP PASS). வாகனநிறுத்தும் இடம்:- தென்மேற்கு சித்திரை வீதி.
வாகனங்கள் மாம்பழச்சாலை,
முக்கிய நபர்களுக்கான அனுமதிச்சான்று உள்ள அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மேலவாசல், மேற்குச்சிததிரை வீதி வழியாகவந்து தெற்கு சித்திரை வீதியில் இறக்கிவிட்டு தென்மேற்கு சித்திரவீதியில் நிறுத்த வேண்டும்.

வெளியில் செல்லும்போது வடக்குச் சித்திரை வீதி, வடக்கு அடையவளஞ்சான், வடக்குவாசல் சென்று பஞ்சக்கரை, ஸ்ரீ ஹோட்டல் வழியாக வெளியே செல்லவேண்டும்.
இதர வாகன அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள்: (OTHER PASS HOLDERS) வாகனநிறுத்தும் இடம்:- வடமேற்கு சித்திரைவீதி, தென் கிழக்கு சித்திரை வீதிஇதர அனுமதி சீட்டு பெற்ற வாகனங்கள் மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மேலவாசல், மேற்குச்சித்திரை வீதி வழியே வடமேற்கு சித்திரை மற்றும் தென் கிழக்கு சித்திரை வீதியில் நிறுத்தவேண்டும். வெளியே செல்லும் போது வடக்குச் சித்திரை வீதி, வடக்கு அடையவளஞ்சான், வடக்குவாசல் சென்று பஞ்சக்கரை, ஸ்ரீ ஹோட்டல் வழியாக வெளியே செல்லவேண்டும்.
குடியிருப்போர்வாகனங்கள்: (Residential Pass), வடகிழக்கு சித்திரைவீதி. வாகனநிறுத்தும் இடம்:- – வடகிழக்கு சித்திரை வீதியில் மட்டும் நிறுத்த வேண்டும்.
உத்திர வீதி மற்றும் சித்திரை வீதியில் குடியிருப்போருக்கான வாகனங்கள் அனைத்தும் வடகிழக்கு சித்திரை வீதியில் மட்டும் நிறுத்த வேண்டும். அவசரக்காலத்தில் வெளியே செல்லும்போது வடக்கு சித்திரை வீதி, வடக்கு அடையவளஞ்சான், வடக்குவாசல் சென்று பஞ்சக்கரை வழியாக வெளியே செல்லவேண்டும்.
வாகன அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள்:
வாகனநிறுத்துமிடங்கள்:- மேலவாசல் மூலத்தோப்பு, 2.ஸ்ரீமத் ஆண்டவர் காலேஜ், சிங்கப்பெருமாள்கோவில் மைதானம்.
கார்கள் மட்டும்:
கரூர் மார்க்கத்திலிருந்து வரும் கார்கள் ஓடத்துறை பாலம் வழியாக காவேரிப்பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், திருவடித்தெரு Beat 37 வழியாக வந்து மேலவாசல் மூலத்தோப்பு பார்கிங்கில் நிறுத்தவேண்டும். வெளியே செல்லும் போது மேல வாசல் நெடுந்தெரு மந்தை, கொள்ளிடக்கரை ரோடு முருகன் கோவில் பஞ்சக்கரை வழியாக வெளியே செல்லவேண்டும்.
மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை மார்க்கத்திலிருந்து கார்களில் வரும் பக்தர்கள் “Y” ரோடு ஜங்சன் CP – 6, ட்ரங்க் ரோடு, திருவாணைக்கோவில் ஜங்சன், காந்திரோடு, நெல்சன் ரோடு வழியாக ஸ்ரீமத் ஆண்டவர் காலேஜ் எதிரில் உள்ள பார்கிங் மற்றும் சிங்கப்பெருமாள்கோவில் பார்கிங்-ல் நிறுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது சிங்கப்பெருமாள் கோவில், அம்பேத்கார் நகர், ஸ்ரீ ஹோட்டல் வழியே செல்ல வேண்டும்.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை சித்திரை வீதி மற்றும் உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை.

வேன்கள் மட்டும்:
கரூர் மார்க்கத்திலிருந்து வேன்களில் வரும் பக்தர்கள் ஓடத்துறை பாலம் வழியாக காவேரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, திருவாணைக்கோவில் ட்ரங்க் ரோடு, ஸ்ரீ ஹோட்டல், அம்பேத்கார் நகர், சங்கர் நகர் வழியாக சிங்கப்பெருமாள்கோவில் மைதானத்தில் வேன்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அதே வழியாக வெளியே திரும்பி செல்லவேண்டும்.

மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை மார்க்கத்திலிருந்து வேன்களில் வரும் பக்கதர்கள் NO.1 டோல்கேட், “Y” ரோடு ஜங்சன், CP – 6, ஸ்ரீ ஹோட்டல், அம்பேத்கார் நகர், அன்பு நகர் வழியாக சிங்கப்பெருமாள்கோவில் பார்க்கிங்கில் நிறுத்தவேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அதே வழியாக வெளியே திரும்பி செல்லவேண்டும்.

காவல்துறை வாகனங்கள்:
காவல் துறை அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாம்பழச்சாலை சந்திப்பு அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு மேலவாசல் வந்து முன் புறம் பார்க்கிங்கில் மட்டும் நிறுத்தவேண்டும்.

வெளியில் செல்லும்போது மேல வாசல், நெடுந்தெரு மந்தை, தசாவதார சன்னதி, வடக்குவாசல், கொள்ளிடக்கரை முருகன் கோவில், பஞ்சக்கரை ரோடு, ஸ்ரீ ஹோட்டல் வழியாக வெளியே செல்லவேண்டும்.
இரண்டு சக்கரவாகனங்கள் & மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ):
நிறுத்தும் இடம் : தெப்பக்குளம் (Two Wheeler) & நெடுந்தெரு மந்தை(AUTO).

மாம்பழச்சாலை சந்திப்பு அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு வழியாக தெப்பக்குளம் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் அதே வழியாக திரும்ப வெளியே செல்லவேண்டும்

மாம்பழச்சாலை திருவானைக்கோவில் ஜங்சன், நெல்சன்ரோடு, ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி மைதானம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு பின்னர் அதே வழியாக வெளியே திரும்பி செல்லவேண்டும்.

கொள்ளிடம் பாலம் பஞ்சக்கரை ரோடு, யாத்ரி நிவாஸ், கொள்ளிடம் முருகன் கோவில் வழியாக மேலவாசல் தெப்பக்குளம் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் அதே வழியா க திரும்ப வெளியே செல்லவேண்டும்.
மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ):

மாம்பழச்சாலை சந்திப்பு அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, நெடுந்தெரு மந்தை வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் அதே வழியாக திரும்ப வெளியே செல்லவேண்டும்.

கொள்ளிடம் பாலம் பஞ்சக்கரை ரோடு, யாத்ரி நிவாஸ், தசாவதார சன்னதி, நெடுந்தெரு மந்தை வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் அதே வழியாக திரும்ப வெளியே செல்லவேண்டும்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பேருந்துகள்: –
வாகன நிறுத்துமிடம்: கொள்ளிடக்கரை (யாத்ரி நிவாஸ் எதிர்புறம்)

பக்தர்களின் பேருந்துகள் பால் பண்ணை-சஞ்சீவி நகர் சந்திப்பு “Y” ரோடு ஜங்சன், CP – 6, பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகனம் நிறுத்துமிடத்தில் (யாத்ரி நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையம் வழியாக வரும் பக்தர்கள் பேருந்துகள் ஓடத்துறை, மாம்பழசாலை, திருவானைக்கோவில் டிரெங்க ரோடு,CP-6, ஸ்ரீஹோட்டல் வழியாக கொள்ளிடக்கரை வாகனம் நிறுத்துமிடத்தில் (யாத்ரி நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும்.

NO:1 Toll Gate வழியே வரும் பக்தர்களின் பேருந்துகள் CP – 6, பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகனம் நிறுத்துமிடத்தில் (யாத்ரி நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். வெளியில் செல்லும்போது பஞ்சக்கரை ரோடு, ஸ்ரீ ஹோட்டல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மேற்கண்டவாறு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக பொதுமக்களின் நலன்கருதி, மேற்கண்ட வாகன போக்குவரத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பை நல்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *