நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி கோரையாறு பகுதியில் ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகள் மற்றும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடியின் கட்டுமானப் பணிகளையும் இன்று (27.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பஞ்சப்பூரில் 11.68 ஏக்கர் பரப்பளவில் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி நிதி, மூலதன மானிய நிதி மற்றும் மாநகராட்சி நிதியின் கீழ் ரூபாய் 236 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி கோரையாறு பகுதியில் ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை இன்று (27.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரும் வகையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது நகராட்சி நிருவாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், அவர்கள், நகரப்பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நகராட்சி நிருவாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை இன்று (27.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments