2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை முன்னிட்டு, வழக்கறிஞர் திரு. P. V. வெங்கட் அவர்கள் தமிழகத்திலேயே முதன்முறையாகத் தனது 11 அம்ச தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். வழக்கறிஞர்களின் நீண்டகால கோரிக்கையான “வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம்” கொண்டு

வரப்படுவதுடன், சுங்கச்சாவடிகளில் (Toll Booth) வழக்கறிஞர்களுக்குக் கட்டண விலக்கு பெற்றுத் தரப்படும் என்பது அவரது முக்கிய வாக்குறுதியாகும். உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, திருச்சி நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் முறையான சேம்பர் வசதி, நவீன கழிப்பறை மற்றும் இலவச வைஃபை (Wi-Fi) வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்துள்ளார்.
நிதியுதவி தொடர்பாக, வழக்கறிஞர் சேமநலநிதியை 25 லட்சம் ரூபாயாக உயர்த்துதல், இளம் வழக்கறிஞர்களுக்கான

ஊக்கத்தொகையை 10,000 ரூபாயாக அதிகரித்தல் மற்றும் 20 ஆண்டுகள் பணிபுரிந்த வாடகை வீட்டு வழக்கறிஞர்களுக்குச் சொந்த வீடு வாங்க லோன் வசதி செய்து தருதல் போன்ற திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார். மேலும், வழக்கறிஞர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு ரொக்கமில்லா மருத்துவக் காப்பீடு வழங்குவதுடன், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட சங்கங்களுக்கு மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நவீன காலத்திற்கு ஏற்ப, கணினி மற்றும் ஸ்கேனர் வாங்க கடனுதவி பெற்றுத் தரவும் தாம் பாடுபடப் போவதாகத் தெரிவித்துள்ள திரு. P. V. வெங்கட், இந்தத் தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு வழக்கறிஞர்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments