தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 373வது அறிக்கையாக, ‘தமிழகத்தின் வீரம், பண்பாடு, கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவருக்கு, ஊக்கத் தொகையாக, மாதம் தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆட்சி வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் தேர்தலுக்காக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சியில்
சமூக நீதிப் பேரவை, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழு சார்பில், ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக வருகை தந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்
ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் வேண்டும்
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருகை தந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பினர் பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் இடம் மனு வழங்கினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments