திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். அவரின் சின்ன கொம்பன் காளை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜயபாஸ்கர்,
பொங்கல் என்றாலே உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்ப்பார்ப்பார்கள்.
தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தாமதமின்றி விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும்.
ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்திட வேண்டும்.

ஆன்லைன் டோக்கன் முறை காளை வளர்போரை கழுத்தை நெரிப்பது போல் உள்ளது. எனவே அதனை ரத்து செய்து கை டோக்கனை வழங்கிட வேண்டும். அப்போது தான் ஜல்லிக்கட்டு போட்டி காலம் முழுவதும் நடைபெறும்.
23 ஆம் தேதி பிரதமர் தமிழகம் வருவது குறித்த கேள்விக்கு,
2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவார் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments