நவ 23 திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி.
குற்றம் சார்ந்த சட்டவியலில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் என்ற தலைப்பில் வழக்கறிஞர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியை மாண்புமிகு முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் துவக்கி வைத்தார் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர்
S. P. கணேசன் அவர்கள் சுகுணா லா அகாடமி சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
S. வைரமுத்து ஆகியோரை வரவேற்றார். நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் சசிகுமார், செயற்குழு உறுப்பினர் எழிலரசி மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் செய்து இருந்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments