திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் மாநில தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய போது….
ஆன்லைன் டோக்கன் முறை ரத்து, மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வசதி தேவை இல்லை, ஐல்லிக்கட்டு நடத்தும் விழா கமிட்டியினருக்கு முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழி பத்திரம் ரத்து. இந்த அறிவிப்பினை வெளியிட்ட தமிழக அரசுக்கு வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பாக நன்றி.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று உறுதி அளித்த அரசு ஆனால் இதுவரை அதை நடைமுறைப்படுத்தவில்லை.
தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடந்து வரும் கிராமங்களில் அரசாணை வெளியிடுவதில் சிக்கல். இதை உடனடியாக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிராமங்களில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு அதிகாரிகள் தலையீடு அதிகமாக உள்ளதால் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பெரும் சிக்கல் உள்ளது.
மஞ்சுவிரட்டு போட்டியினை அதன் பாரம்பரியம் மாறாமல் நடைபெற அரசு வழி வகை செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு தடை என்று ஆரம்பித்த காலத்தில் இருந்து தொடர்ந்து போராடி வரும் அமைப்புகளுக்கு அரசு சார்பாக எந்த வித முக்கியத்துவமும் கொடுப்பது இல்லை. ஆனால் அரசு ஒரு சில அமைப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது.
தற்போது அரசு அறிவித்துள்ள அரசு வேலை எந்த விதத்தில் முகாந்திரம் உள்ளது அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அது கிடைக்கும்,
ஒருவேளை ஆட்சி மாறினால் அந்த அரசு வேலை கிடைக்குமா என்று கேள்வி?
தேர்தலுக்காக மட்டுமே முதல்வர் அறிவித்துள்ளார் எனவும், நீண்ட நாள் கோரிக்கை தேர்தல் நேரத்தில் அறிவிப்பது ஏன், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இன்னும் பரிசினை உள்ளது ஏன் என கேள்வி
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தொடர்பு இல்லாத கோயம்புத்தூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது
ஆனால் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள கிளியூர் கிராமத்திற்கு இன்னும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments