Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தவெகவில் இணைந்த அதிமுக மூத்த அமைச்சர் – மீண்டும் களமிறங்க தயார்

1990 -1996 வரை ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர். பின்னர் தமிழர் பூமி என்ற கட்சியை ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி அமைத்தார். அதன் பிறகு விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கிய பொழுது அதில் இணைந்தார்.

பின்னர் மீண்டும் ஜெயலலிதா அவர்களை சந்தித்து அதிமுகவில் இணைத்து கொண்டு ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பொழுது இபிஎஸ் உடன் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். அதன் பிறகு அதிமுக ஓபிஎஸ் உடன் பயணித்து அதிலிருந்து வெளியேறினார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் செல்வாக்கு மிக்க அவர் தற்பொழுது அதிமுக தொண்டர்களை இணைக்க வேண்டும் என நீண்ட காலமாக குறிப்பிட்டு வந்தார். டிடிவி தினகரன் இபிஎஸ் இணைந்த நிலையில் ஒருங்கிணைக்க வேண்டும் என போராடிய ஏராளமானவர்களில் இவரும் ஒருவர். ஆனால் இவர்கள் எல்லாம் தற்பொழுது தனித்துவிடப்பட்டனர். இதனால் தற்பொழுது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

தமிழக வெற்றி கழகம் சார்பாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். தனக்கு பதவி முக்கியம் இல்ல தமிழக வெற்றிக்கழகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற வெற்றி இலக்கை நோக்கி பயணிப்பதாக தனது சகாக்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *